தவிட்டு அடுப்பு (Rice hull stove).


இதைப்பற்றி யாரேனும் கேள்வி பட்டிருப்பீர்களா என்பது சந்தேகமே. ஒன்றும் பெரிய அறிவியலோ அல்லது சுவாரஸ்யமோ இல்லாத ஒரு தொழில் நுட்பம்தான் இருந்தாலும் என் குழந்தைப் பருவத்தை ஞாபகப்படுத்துவதாலேயே அதைப் பற்றி எழுதுவதும் எனக்கு சுகமாக இருக்கிறது. அது என்ன தவிட்டு அடுப்பு: முன்பெல்லாம் வீடுகளில் பயன் படுத்தப் பட்டு வந்த சுடுமண் அடுப்பு. அதில் விறகு வைப்பதற்கான பெரிய திறப்புக்கு பதில் வட்டமான ஒரு துளை மட்டும் இருக்கும். அடுப்பின் உட்புறமாக ஒரு பாட்டிலை வைத்து அதனைச்சுற்றி தவிடைக் கொட்டி லேசாக இடிக்க வேண்டும். கொட்டப்படும் தவிடு அடுப்பின் துளை வழியே வெளியேறிவிடாமல் இருக்க ஒர் துணிப்பந்தை வைத்து அந்த துளையை அடைத்து விடலாம். இடித்து முடித்த பிறகு பாட்டிலை எடுத்து விட்டு சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க வேண்டியதுதான். ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் எரியும் என்பதால் ஒரு சிறு விறகின் உதவியுடன் அனைத்து சமையலையும் என் அம்மா முடித்து விடுவார். நான் வளரும் முன்பே அதன் பயன்பாடு நின்று போய் நாங்க்ள் எரிவாயுவுக்கு மாறி விட்டோம். இப்போது மின் அடுப்பு பயன்படுத்துவதைப் பற்றி அவர் யோசித்துக் கொண்டிருக்கிறார். இளமையோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தவிட்டு அடுப்பின் நினைவு என்னைக் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்துகிறது.

0 comments: